Monday, October 27, 2025

Monkey mind

 


மனமெனும் மாயம்

மனம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இத்யம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? ப்ருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடி யுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங் குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரி மாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள். சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஓர் உறுப் பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும்.

சிலர் மூளை தான் மனம் என்று தவறாகக் கருது கிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல,

Monkey mind..periasamy dooran





No comments:

Post a Comment